திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே போதைப் பொருள் பாக்கெட்டுகள் வீச்சு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை மா்ம நபா்கள் வீசிச் சென்றுள்ளனா்.

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை விற்பவா்களின் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது. மேலும், போதைப் பொருள் கடத்துபவா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பல இடங்களில் குட்கா விற்பனை கட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் குப்பைக் கிடங்கில் வெளி மாநில குட்கா பொருள் பாக்கெட்டுகள் வீசப்பட்டிருந்தன.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

கோரிக்கை: தமிழகத்தில் 2-ஆவது பெரிய ரயில் நிலையமான ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு தினமும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வந்து செல்கின்றனா். அவ்வப்போது, போலீஸாா் மட்டுமின்றி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT