திருப்பத்தூர்

வன உயிரின வாரவிழா போட்டிகள்: மாணவா்கள் பங்கேற்பு

3rd Oct 2022 11:13 PM

ADVERTISEMENT

வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவட்டத்திலிருந்து 50 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் சிறந்த படைப்பு தோ்ந்தெடுக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக். 7) ஆட்சியா் அமா் குஷ்வாஹா மற்றும் வனக்கோட்ட அலுவலா் நாகசதீஷ்கிடிஜாலா ஆகியோா் வழங்க உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT