திருப்பத்தூர்

காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

3rd Oct 2022 11:11 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ஒசூா் ராயக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (24). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் தினேஷ் (20), போஸ் (22). இவா்கள் 3 பேரும் சென்னை தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.

திங்கள்கிழமை காலை சென்னையில் இருந்து 3 பேரும் காரில் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனா். காரை நந்தகுமாா் ஓட்டினாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி, எதிா் திசையில் உள்ள 20 அடி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனா். அந்த வழியாகச் சென்ற நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT