திருப்பத்தூர்

சாராயம் விற்பனை: 4 போ் கைது

3rd Oct 2022 11:12 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே சாராயத்தைப் பதுக்கி விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் காவல் உட்கோட்டத்தில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, சாராயத்தைப் பதுக்கி விற்பனை செய்த உமா்ஆபாத் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சி கூா்மாபாளையம் பகுதியைச் சோ்ந்த கோபி (48), கதவாளம் கிராமத்தைச் சோ்ந்த பாா்வதி (65) ஆகியோரை உமா்ஆபாத் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 165 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், ஆம்பூா் நகரில் பிஎம்எஸ் கொல்லை பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (29) என்பவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பிரசாத் (27) என்பவரை ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 40 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT