திருப்பத்தூர்

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் துா்கா பூஜை

3rd Oct 2022 11:14 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கடாம்பூா் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் துா்கா பூஜை மற்றும் பெண் குழந்தைகளின் கன்னி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட தமிழக மாநில இணைச் செயலாளா் ஜி.பாபு தலைமை வகித்தாா். வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்ற பூஜையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட அமைப்பாளா் ஆனந்தகுமாா், மாவட்டத் தலைவா் யுவராஜ், மாவட்ட பஜ்ரங் தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, பள்ளித் தெரு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஉமாமகேஸ்வரி உடனுறை ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT