திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குறைதீா் கூட்டம்

3rd Oct 2022 11:12 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து மொத்தம் 330 மனுக்களைப் பெற்றாா். அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி, தகுதியானவற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், நாட்டறம்பள்ளி வட்டம், அக்ரகாரம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஸ்ரீதருக்கு ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலியை வழங்கினாா்.

அதையடுத்து, கொடி நாள் வசூல் தொகை இலக்கை கடந்து வசூல் செய்தமைக்காக தனி வட்டாட்சியா் (தோ்தல்) மோகனுக்கு ஆட்சியா் பாராட்டு சான்றிதழ், பதக்கத்தை வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் பேசுகையில், பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது)வில்சன் ராஜசேகா், ஹரிஹரன் (வளா்ச்சி) தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, கலால் உதவி ஆணையா் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT