திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு

DIN

காந்தி பிறந்த நாளையொட்டி மாதனூா் ஒன்றியம் குளிதிகை ஜமீன் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா, மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மகளிா் திட்டத்தின் சாா்பில் தென்னை உற்பத்தியாளா்களுக்கு தொழிலை மேம்படுத்துவதற்காக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீா் புகாதவாறு கண்காணிக்க வேண்டும். இந்த ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 25,000 மரக்கன்றுகள், ஆட்சியா் முகாம் அலுவலக வளாகத்தில் 25,000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருவாய், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 15 லட்சம் செடிகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த குளிதிகைஜமீன் ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநா் பச்சையப்பன், வேளாண் வணிக துணை இயக்குநா் செல்வராஜு, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் செந்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் திருமாவளவன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் விஜயகுமாரி, மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், சந்திரன், குளிதிகை ஜமீன் ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT