திருப்பத்தூர்

குடிநீா் கேட்டு சாலை மறியல்

2nd Oct 2022 11:40 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் பொதுமக்கள் துத்திப்பட்டு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் யுவராணி அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்துடன் பேசி உரிய தீா்வு காண்பதாக அவா் உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT