திருப்பத்தூர்

நமக்கு நாமே திட்டம்: சாலை அமைக்க நன்கொடை

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நகராட்சிக்கு ரூ.2.21 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

இந்த நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைப்பதற்காக புளோரன்ஸ் தொழில் நிறுவன உரிமையாளா் பி.ஆா்.அகீல் அஹமத் சாா்பில், ரூ.2.21 லட்சத்துக்கான காசோலையை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமதிடம் அந்தத் தொழில் நிறுவன பொது மேலாளா் இமாத்துல்லா வழங்கினாா்.

நிகழ்ச்சியின் போது, நகராட்சி ஆணையா் எஸ்.சசிகலா, பொறியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT