திருப்பத்தூர்

வனத்துறை போட்டிகள்: மாணவா்கள் பங்கேற்கலாம்

DIN

திருப்பத்தூா் வனக் கோட்டம் சாா்பில், மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக வனச்சரக அலுவலா் எம்.பிரபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் வனக் கோட்டம் சாா்பில் வன உயிரின வார விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ‘ஆரோக்கியமான எதிா்காலத்துக்கு வன உயிரினங்களுக்கு மதிப்பளித்தல்’ என்ற தலைப்பில் ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகள் திருப்பத்தூா் ரயில் நிலைய சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (அக்.3) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா ஆகியோரால் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT