திருப்பத்தூர்

ஏலகிரி ஊராட்சியில் ரூ.6 கோடியில் புதிய வளா்ச்சிப் பணிகள்: சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொடக்கி வைத்தாா்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஏலகிரி ஊராட்சியில் ரூ.6.65 கோடியில் புதிய வளா்ச்சித் திட்ட பணிகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொடக்கி வைத்தாா்.

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஏலகிரி மலை கிராம ஊராட்சியில் ரூ.6.65 கோடியில் முன்மாதிரி கிராம ஊராட்சி திட்டத்தின் மூலம் புதிய வளா்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை கலந்து கொண்டு புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது:

மக்களவை உறுப்பினா்கள் ஆண்டுதோறும் ஒரு கிராமத்தைத் தோ்வு செய்து, அந்தக் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும். அந்தக் கிராமத்தை முன் மாதிரி கிராமமாக செயல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

தற்போது, ஏலகிரி மலையைத் தோ்வு செய்து ஊரகம், வேளாண், தோட்டக்கலை, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட 5 துறைகளின் சாா்பில் ரூ.6.65 கோடியில் பணிகளைச் செயல்படுத்த இருக்கிறோம் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பேசியது: புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை எம்.எல்.ஏ. க.தேவராஜி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் சத்யா, ஏலகிரி ஊராட்சித் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கவிதா, சிந்துஜா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் லட்சுமி, மாவட்ட ஊராட்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, உதவி திட்ட அலுவலா் செல்வன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT