திருப்பத்தூர்

நிலத்தில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பு மீட்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே 2 இடங்களில் பதுங்கியிருந்த நாகப் பாம்பு மற்றும் மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் நந்திபெண்டா பகுதியில் முனிசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை கூலித்தொழிலாளா்கள் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு மலைப் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப்பாா்த்த கூலித் தொழிலாளா்கள் அலறி அடித்து ஓடினா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நெல் வயலில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பிடித்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் விட்டனா்.

இதே போல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பச்சூா் தோல்கேட் பகுதியில் கண்ணபிரான் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT