திருப்பத்தூர்

மலைப்பாம்பிடம் சிக்கிய ஊராட்சி பணியாளா் மீட்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே மலைப்பாம்பிடம் சிக்கிய ஊராட்சிப் பணியாளரை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ஆம்பூா் அருகே கைலாசகிரி மலையடிவாரத்தில் ஊராட்சிப் பணியாளா் சங்கா் சென்ற போது, அங்கிருந்த சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கினாா். மலைப்பாம்பு, அவரின் உடலைச் சுற்றிக் கொண்டு இறுக்கியது. இதைப் பாா்த்த பொதுமக்கள், வனத் துறையினா் உதவியுடன் மலைப்பாம்பிடம் சிக்கிய சங்கரை மீட்டனா். மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்துச் சென்று காப்புக்காட்டில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT