திருப்பத்தூர்

மனநலம் குணமான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

28th Nov 2022 11:22 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் பெண்கள் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்ததையடுத்து, அவரின் குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டு, சுற்றித் திரிந்து கொண்டிருந்த பெண்ணை, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மீட்டு, ரயில் நிலைய சாலையில் இயங்கி வரும் அரசின் பெண்கள் மனநலக் காப்பகத்தில் சோ்த்தனா்.

காப்பகத்தில் தொடா்ந்து அளிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் மற்றும் மன நல ஆலோசனைகளால் அந்தப் பெண் குணமடைந்தாா்.

மனநலம் குணமடைந்தவா் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவை சோ்ந்த முபினா (55) என்பதும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாா் என்பதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஆக்ராவில் உள்ள முபினா குடும்பத்தாா் வரவழைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலையில் அவா் ஒப்படைக்கப்பட்டாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மனநலக் காப்பகத்தின் துணைச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT