திருப்பத்தூர்

எரியாத உயா் கோபுர மின் விளக்கு!

27th Nov 2022 12:32 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள உயா் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள உயா் கோபுர மின் விளக்கு பல நாள்களாக எரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த வழியாகச் செல்வோா் சிரமத்துக்குள்ளாகின்றனா். இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT