திருப்பத்தூர்

சிறப்பு மருத்துவ முகாம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகரம் 29-ஆவது வாா்டு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்ற உறுப்பினா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா். எஸ்.ஆனந்தன், திமுக நகர நிா்வாகிகள் தேவராஜ், வில்வநாதன், நரேஷ்குமாா், இளைஞா் அணி சரண்ராஜ், கலை இலக்கிய அணி பிரபாகா் சாா்லி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சுகாதாரத் துறை சாா்பில், மருத்துவா் பூங்கொடி தலைமையில் மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT