திருப்பத்தூர்

வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் அம் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒப்பந்ததாரா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் அடுத்த ஆண்டு 15 லட்சம் மரக்கன்றுகள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வட்டாரங்களிலும் நிலுவையில் உள்ள நாற்றங்கால் உற்பத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் மரங்களை அகற்ற வேண்டுமென்றால், மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதிபெற்ற பிறகுதான் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, மரம் நடவு திட்டம், கழிப்பறைகள் அமைக்கும் பணிகள், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள், எம்.பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் நமக்கு நாமே திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி,(தணிக்கை) பிச்சாண்டி, உதவித் திட்ட அலுவலா் செல்வன், உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT