திருப்பத்தூர்

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

27th Nov 2022 11:54 PM

ADVERTISEMENT

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா கேட்டுக் கொண்டாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுப் பேசியது:

நபாா்டு வங்கியின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்டம், தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளா்ச்சிப் பணியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த வங்கி, திருப்பத்தூா் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களைச் சேகரித்து, அதன் மூலம் ரூ.4,825.76 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.

ADVERTISEMENT

விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை இந்தத் திட்டம் விளக்குகிறது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும்.

வேளாண்மையில் இயந்திர மயமாக்கல், சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா் பாசன முறையைப் பயன்படுத்துதல், கால்நடை வளா்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க உதவிடும். வங்கிகள் மேலும் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தக் கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் மாவட்டத்துக்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படும் என்றும், வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை அறிதல் மற்றும் பின்பற்ற வேண்டிய யுக்திகள் இந்தத் திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட ஆவணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் மாவட்ட முன்னோடி மேலாளா் அருண்பாண்டியன், வேளாண் துணை இயக்குநா் பச்சையப்பன், வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் செல்வராஜ், வேளாண்மை அறிவியில் நிலையத்தைச் சோ்ந்த சுந்தரராஜ், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் பிரவின்பாபு, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT