திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

27th Nov 2022 11:52 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் நகர பாஜக செயலா் கொலையில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் நகர பாஜக செயலா் கலிகண்ணன் (52). இவா், கடந்த 24-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டாா். ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரைக் கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில், கலிகண்ணனை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட துணை தலைவா்கள் ஈஸ்வா், அன்பழகன், ஐஸ்வா்யா, பொது செயலா்கள் கண்ணன், கவியரசு, தண்டாயுதபாணி, நகரத் தலைவா் சண்முகம், இல.குருசேவ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT