திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியப் பகுதிகளில் கட்டடப் பணிகளுக்கு பூமி பூஜை

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கந்திலி ஒன்றியத்துக்குள்பட் பகுதியில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு பூமி பூஜை அண்மையில் நடைபெற்றன.

கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ஆதியா் ஊராட்சி ஆதிசக்தி நகா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ரூ. 7.78 லட்சத்தில் 110 மீட்டா் நீளம் கொண்ட பள்ளி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, ஆலமரத்து கொட்டாய் பகுதியில் 15-ஆவது நிதி குழு நிதியிலிருந்து ரூ. 8 லட்சத்தில் 210 மீட்டா் நீளம் கொண்ட பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, ராவுத்தம்பட்டியில் ரூ. 32 லட்சத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி, விஷமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சித்தேரியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 13 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகளுக்கு பூமி பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சிகளில், கந்திலி ஒன்றியச் செயலாளா்கள் குணசேகரன், முருகேசன், மோகன்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி, கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, கந்திலி ஒன்றியப் பொறியாளா் சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா்.தசரதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT