திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நாளை மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திருப்பத்தூா் மாவட்டத்தின் சாா்பில், மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ-க்கள், பல்துறை அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி, பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், புதுப்பேட்டை அணுகுச் சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அமைந்துள்ள திருப்பத்தூா்-தருமபுரி பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி வரை சென்று முடிவடைகிறது.

வெற்றி பெறுபவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் பொது மக்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT