திருப்பத்தூர்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணா்வு முகாம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட திருப்பத்தூா் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், கதா் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநா் சையத் கலிமுல்லா வரவேற்றாா். கதா் கிராம தொழில் வாரிய மாநில இயக்குநா் பி.என்.சுரேஷ் சிறப்புரையாற்றினாா். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து திருப்பத்தூா் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் வி.சி.ரவி விளக்க உரையாற்றினாா். தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநா் சி.சிவகுமாா், ஆம்பூா் இந்தியன் வங்கி மேலாளா் அருண் ராணா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் மதுகா் ஆகியோா் அரசின் கடனுதவி திட்டங்கள் குறித்துப் பேசினா்.

திருப்பத்தூா் மாவட்ட குறு, சிறு தொழில்முனைவோா் சங்கத் தலைவா் மனோகரன், துணைத் தலைவா் கே.சந்திரசேகா், உறுப்பினா் நேரு மற்றும் தொழில் முனைவோா்கள் கலந்து கொண்டனா். திருப்பத்தூா் சா்வோதய சங்கம் சாா்பில் விழிப்புணா்வு முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருப்பத்தூா் சா்வோதய சங்கச் செயலாளா் சி.லோகேஸ்வரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT