திருப்பத்தூர்

இலங்கை தமிழா்களுக்காக ரூ. 8 கோடி மதிப்பீட்டில் 160 புதிய வீடுகள்: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்.

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே இலங்கை தமிழா்களுக்காக ரூ. 8 கோடி மதிப்பீட்டில் 160 புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணியை அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா். ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், திருப்பத்தூா் மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில், 935 பயனாளிகளுக்கு ரூ. 12 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் எ.வ. வேலு பேசியது:

திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 56 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 கோடியில் கூடுதல் கட்டடம், ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மாதனூா் பாலாற்று மேம்பாலம் ரூ. 30 கோடியில் 3 மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். பச்சகுப்பம் பாலாற்று மேம்பால கட்டுமானப் பணி 2023 - 2024-ஆம் நிதியாண்டில் தொடங்கப்படும். கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலம் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்.பி.க்கள் டி.எம். கதிா் ஆனந்த் (வேலூா்), சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), க. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ. நல்லதம்பி (திருப்பத்தூா்), மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை துணை ஆணையா் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இ. வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் என்.கே. ஆா். சூரியகுமாா், வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, வட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT