திருப்பத்தூர்

கொரிப்பள்ளம் பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

24th Nov 2022 10:33 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த கொரிப்பள்ளம் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் சாராய ஊறல் கண்டறிந்து அழிக்கப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில், காவல் ஆய்வாளா் நாகராஜ், திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் மணி மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கொரிப்பள்ளம் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் கண்டறிப்பட்டது. பிறகு அங்கிருந்த, 2 ஆயிரத்து 500 லிட்டா் சாராய ஊறல் மற்றும் கேன்கள், சாராயம் காய்ச்ச பயன்படுத்திக் கொண்டிருந்த அடுப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனா்.

இது குறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாராய ஊறல் பதுக்கியவா்களை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT