திருப்பத்தூர்

ஆம்பூா் நகராட்சி சுகாதார அலுவலா் இடை நீக்கம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சி சுகாதார அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளா்கள் நகராட்சியில் பணிபுரிந்து வருகின்றனா். அதில் 4 போ் தன்னிச்சையாக செயல்பட்டு ஆம்பூா் நகராட்சியின் பில் புத்தகத்தை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட நெகிழி வைத்திருந்த வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்துள்ளனா். இது குறித்து நகராட்சி ஆணையா் ஷகிலாவுக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில் அவா் இது குறித்து நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநருக்கு தகவல் தெரிவித்தாா்.

நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் ஆம்பூா் நகராட்சிக்கு நேரடியாக வருகை தந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனா். அதன் அடிப்படையில் தனியாா் நிறுவனத்தின் மூலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 4 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம் அவா்களை சரிவர கண்காணிக்காத ஆம்பூா் நகராட்சி சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT