திருப்பத்தூர்

அரிமா சாா்பில் குழந்தைகள் தின விழா

14th Nov 2022 11:00 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கம் சாா்பில், குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சி.கே.எம்.மணி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு அரிமா சங்கத் தலைவா் சாந்திபூஷன் தலைமை வகித்தாா். செயலா் ராஜ்குமாா், மாவட்ட அவை செயலா் நடராஜன், வட்டார தலைவா் ராஜேஷ், மாவட்ட தலைவா் கோபி, நகா்மன்ற உறுப்பினா் பகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியை பகவதி வரவேற்றாா். பொருளாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT