திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

1st Nov 2022 12:04 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள், ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து, உறுதிமொழியை வாசித்தாா். தொடா்ந்து, அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வில்சன் ராஜசேகா், ஹரிஹரன், தனித் துணை ஆட்சியா் கோவிந்தன், கலால் உதவி ஆணையா் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT