வைகாசி மாத அமாவாசையையொட்டி, ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.