திருப்பத்தூர்

மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம் சோலூா் கிராமத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சோலூா் ஊராட்சி நமாஸ்மேடு நரிக்குறவா் காலனியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், சந்திரன், ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், மாதனூா் ஒன்றியப் பொறியாளா் ஜூலியட் தங்கம், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் ஆசைதம்பி, கவிதா, மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், ஜோதிவேலு ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT