திருப்பத்தூர்

திருப்பத்தூா் குறைதீா் முகாமில் 286 மனுக்கள் அளிப்பு

24th May 2022 01:04 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 286 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 286 போ் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் உதயேந்திரம் பேரூா் திமுக செயலாளரும், பேரூராட்சி உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனா்.

அதில், உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 40 ஆண்டுகளாக வசித்து வந்தோம். தற்போது அங்கிருந்து எங்களை காலி செய்ய சொல்லிவிட்டனா். தற்போது 40 குடும்பத்தினரில் 15 பேருக்கு மட்டுமே மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT