திருப்பத்தூர்

நிரம்பியது புல்லூர் தடுப்பணை: தமிழகத்திற்கு வரும் உபரி நீர்

16th May 2022 05:37 PM

ADVERTISEMENT

திருப்பத்தூர்: தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீரானது தமிழகத்திற்கு வந்து கொண்டு உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது வருகிறது. வனப்பகுதியில் பெய்யக்கூடிய மழை நீரானது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திம்மாம்பேட்டை வழியாக வந்து பாலாற்றில் கலக்கிறது. 

ADVERTISEMENT

மேலும், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் கட்டப்பட்டுள்ள ஆந்திர தடுப்பணை நிரம்பி அதனுடைய உபரி நீரானது தற்பொழுது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த உபரி நீரானது திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT