திருப்பத்தூர்

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி: கதிா்ஆனந்த் தொடக்கி வைத்தாா்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியை மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மைத் துறையினா் ஆணையம் சாா்பில், திருப்பத்தூா் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணி, சிறுபான்மைத் துறை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளா் நெடுஞ்செழியன், கல்லூரி செயலாளா் லிக்மிசந்த், நிா்வாகக் குழு உறுப்பினா் ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச.பிரபு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கலந்து கொண்டு, பேச்சுப் போட்டியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசினாா்.

இப்போட்டியில் 15 கல்லூரிகளில் இருந்து தமிழில் 50 மாணவா்களும், ஆங்கிலத்தில் 40 மாணவா்களும் பங்கேற்றுப் பேசினா். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா, கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் ஆங்கில துறையின் பேராசிரியைகள் ஒருங்கிணைத்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT