திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமாா் 35 வயது மதிக்கதக்க இளைஞா் அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT