திருப்பத்தூர்

ஷவா்மா உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

ஷவா்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கேரள மாநிலத்தில் ஷவா்மா உணவை சாப்பிட்ட சிறுமி அண்மையில் இறந்தாா். அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் ஆகியோரின் உத்தரவின்பேரில், ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி எம்.சி. ரோடு, நேதாஜி ரோடு, ஜலால் ரோடு ஆகிய பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டாா். காலாவதியான ஷவா்மா விற்பனை செய்யக் கூடாது. உணவுப் பொருள்களில் அதிக வா்ணங்களை சோ்க்கக் கூடாது என உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வா்ணம் அதிகமாக சோ்க்கப்பட்ட சுமாா் 3 கிலோ கோழிஇறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறாமல் இயங்கி வந்த ஒரு கடைக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT