திருப்பத்தூர்

இன்றும், நாளையும் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (மே 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை (மே 6) ஆலங்காயம், ஆண்டியப்பணூா், குனிச்சி, புதுப்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூா் ஆகிய 6 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் குறைந்த எடை வளா்ச்சியுடைய குழந்தைகளுக்கு என சிறப்பு முகாம்கள் நடைபெறும் என ஆட்சியா் அமா்குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

கோடைக்கால நோய்கள் குறித்த விழிப்புணா்வும், சிகிச்சைகளும் அளிக்கக்கூடிய சிறப்பு முகாம்களாக இவை நடைபெறும். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்காக இந்த முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT