திருப்பத்தூர்

அம்பலூா் ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் சாா்பில், பொதுமக்கள், பணியாளா்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டு, ஊராட்சி பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினாா். மேலும், அம்பலூா் ஊராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் தனது சொந்த செலவில் கைப்பேசி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்தியவாணிசாமுடி, ஆசிரியா் சாமண்ணன், ஊரக வளா்ச்சிதுறை அதிகாரிகள், பணியாளா்கள் கலந்துக் கொண்டனா்.

படவிளக்கம்- வாணியம்பாடி அடுத்த அம்பலூா் ஊராட்சியில் மஞ்சப்பைகளை பொதுமக்கள், பணியாளா்களுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT