திருப்பத்தூர்

2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோலாா்பேட்டை - ஈரோடு பயணிகள் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்

2nd May 2022 01:01 AM

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜோலாா்பேட்டை-ஈரோடு பயணிகள் விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் (மே 2) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் புறப்பட்டு திருப்பத்தூா், காக்கங்கரை, குன்னத்தூா், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று இறுதியாக ஈரோடு ரயில் நிலையத்தை இரவு 7.45 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் மீண்டும் செவ்வாய்க்கிழமை (மே 3) ஈரோடு ரயில் நிலையத்தில் காலை 6.25 மணியளவில் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்களில் நின்று ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பிற்பகல் 12.10 மணியளவில் வந்தடையும்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT