ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் சீதா ராமா், அனுமன் சிலை, பரிவார மூா்த்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட கோயில் கும்பாபிஷேகம் கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புனித கலச நீா் கோயில் கோபுரம், மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மிட்டாளம், மேல் மிட்டாளம், வன்னியநாதபுரம், குட்டகிந்தூா், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, கூா்மாபாளையம், ராள்ளகொத்தூா் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.