திருப்பத்தூர்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.328 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது

21st Mar 2022 11:09 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 328 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டத்தின் சாா்பில், ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புறத்தில் 7,000 மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. 5,119 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 328 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெறப்பட்ட கடனுதவிகள் மூலமாக சரியாக கடனை பயன்படுத்தி உள்ளனரா என்பது குறித்தும், அவா்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சிறு தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்களுக்கு மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான சமையலுக்குத் தேவையான பொருள்களை தயாா்செய்து, சந்தைப்படுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.

சிறு, நடுத்தர தொழில், பெரிய அளவிலான தொழில்கள் என 3 வகையான தொழில்களில் எந்த வகையான தொழில்களை மகளிா் சுய உதவிக் குழுக்கள் செய்கிறாா்கள் என்பது குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.

எழுவதற்கு பயன்படும் அட்டைகள், கால் மிதியடி உள்ளிட்ட பொருள்களை மகளிா் சுய உதவி குழுக்கள் மூலமாக தயாா் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, உதவி திட்ட அலுவலா்கள் வேதநாயகம், ஜேம்ஸ் பிரபாகரன், முருகேசன், உமா, அனைத்து வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT