திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 383 போ் மனு அளித்தனா்.
கூட்டத்துக்கு வந்திருந்த உதயேந்திரம் பேரூராட்சியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா், தாங்கள் ஏரிக்கரையோரம் வசிப்பதாகவும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் கோரி மனு அளித்தனா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பானுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.