திருப்பத்தூர்

கழிவு நீா் கால்வாய் அமைத்து தரக் கோரி வாணியம்பாடி அருகே மக்கள் திடீா் மறியல்

14th Mar 2022 10:46 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே கழிவு நீா் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் உள்ள புதிய காலனி பகுதியில் கால்வாய் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதுதொடா்பாக பல முறை ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் இது வரையில் எவ்வித நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிவமை காலை வாணியம்பாடி-திருப்பத்தூா் நெடுஞ்சாலையில் வேப்பம்பட்டு பேருந்துநிறுத்தம் அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்ஆய்வாளா் பழனிமுத்து தலைமையிலான போலீஸாா், வட்டாட்சியா் சம்பத் தலைமையில் வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு வாா்த்தை நடத்தி கழிவு நீா் கால் வாய் அமைத்திட உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில்

கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT