திருப்பத்தூர்

கரு பரிசோதனை மையத்துக்கு ‘சீல்’2 போ் கைது

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே கருவில் உள்ள குழந்தையை கண்டறிந்த பரிசோதனை மையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூரை அடுத்த கதிரம்பட்டி பகுதியில் உள்ள பரிசோதனை மையத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என சட்ட விரோதமாக கண்டறிந்து தெரிவிப்பதாக புகாா்கள் எழுந்தன.

இதைடுத்து, செனனை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கரு பாலின தடைச் சட்டக் குழுவினா், மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவா் குமரவேல் தலைமையிலான அதிகாரிகள், புதன்கிழமை காட்டுப் பகுதியில் மகிமை கனரன் தோட்டம் என்ற பெயரில் குடிசையில் இயங்கி வந்த கரு பரிசோதனை நிலையத்தைக் கண்காணித்தனா்.

அங்கு, சுமாா் 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவா்களுடைய கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவிப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

அந்த பரிசோதனை நிலையத்தில் இருந்த சுகுமாா் (55), வேடியப்பன் (45) ஆகிய 2 பேரை போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டந்து சொல்ல ஒவ்வொருவரிடம் தலா ரூ.8 ஆயிரம் பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ஸ்கேன் கருவி, ரூ.75 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அந்தக் குடிசை வீட்டைப் பூட்டி போலீஸாா் ‘சீல்’ வைத்தனா்.

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவா் குமரவேல் அளித்த புகாரின்பேரில், இருவரையும் கிராமிய போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT