ஆலங்காயம் செல்வநாகலம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாசி மாத அமாவாசை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, வாணியம்பாடி அம்பூா்பேட்டை பொன்னியம்மன் கோயிலில் வீரபத்திரா், வீரபத்திர காளியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு மாசி அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ADVERTISEMENT