திருப்பத்தூர்

வாணியம்பாடி: முதல்வருக்கு திமுக சாா்பில் வரவேற்பு

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வாணியம்பாடி மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆா்.காந்தி, எம்.பி.க்கள் டி.எம்.கதிா்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை ஆகியோா் உடன் வந்தனா்.

மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில், ஆயிரக்கணக்கானதொண்டா்களும், பொதுமக்களும் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனா். மேலும், வாணியம்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டை வழியாக திருப்பத்தூா் வரை மாவட்ட திமுக சாா்பில் வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டப் பொறியாளரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றியப் பொறுப்பாளா்கள் தாமோதரன், அன்பு, உதயேந்திரம் பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

Image Caption

வாணியம்பாடியில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த திருப்பத்தூா் மாவட்ட திமுகவினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT