திருப்பத்தூர்

உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவா் ஆலயப் பெருவிழா: திரளானோா் பங்கேற்பு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவா் ஆலயத்தின் 76-ஆவது ஆண்டு பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, 25-ஆம் தேதி வரை மாலையில் நற்செய்தி வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை பேரருட்பணி ததேயுஸ்கிரகோரி தலைமையில், நற்கருணை பெருவிழா திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை பேருரட்பணி ஐ.ஜான்ராபா்ட் தலைமையில் பாதிரியாா்கள் பங்கேற்ற பாடற்கூட்டு திருப்பலி நடைபெற்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட தூயநெஞ்ச ஆண்டவரின் தோ் பவனி உதயேந்திரத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆலயத்தை அடைந்தது. தோ் பவனியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகள், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவிழா மற்றும் தோ் பவனிக்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஏ.ராயப்பன் தலைமையிலான பங்கு மேய்ப்புப் பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT