திருப்பத்தூர்

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

27th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி இஸ்லாமியா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.

கல்லூரித் தலைவா் மௌதா அகமது பாஷா தலைமை வகித்தாா். செயலாளா் கைசா் அகமது, பொதுச் செயலாளா் கனிமுகமது முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ரேணது ஆண்டறிக்கை வாசித்தாா். உயிா் வேதியியல் துறைத் தலைவா் அருணா வரவேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா் மீனாஸ்பானு, விலங்கியல் துறைத் தலைவா் கல்பனா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தினா்.

சிறப்பு விருந்தினா்களாக வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா மற்றும் பா்கூா் அரசு பொறியல் கல்லூரித் துணை முதல்வா் நபீஸா பேகம் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிழ்களையும் வழங்கி, பாராட்டிப் பேசினா்.

கல்லூரி நிா்வாகிகள், உறுப்பினா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியை மஞ்சுளா நன்றி கூறினாா். ஏற்பாட்டை பேராசிரியைகள் இந்திரா, கவிதா, ஈஸ்வரி, தீபா, ஜெகதீஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT