திருப்பத்தூர்

பேருந்து இயக்க நேரத்தை மாற்றக் கோரி சாலை மறியல்

27th Jun 2022 11:36 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே நகரப் பேருந்து இயக்கும் நேரத்தை மாற்றக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்திலிருந்து காலை 8 மணிக்கு அரசு நகரப் பேருந்து எண் 16 இயக்கப்பட்டு வந்தது. அதில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்லும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல தரப்பினா் பயணம் செய்தனா். இந்தப் பேருந்து ஆம்பூருக்கு காலை 9 மணிக்கு வந்தடையும்.

அதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், தொழிலாளா்கள் பயனடைந்து வந்தனா். தற்போது அந்தப் பேருந்து வழித்தடம் மாற்றப்பட்டு, கூடுதலாக சுட்டகுண்டா, பொன்னப்பள்ளி ஆகிய கிராமங்களின் வழியாகச் செல்வதால், கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு, காலை 9.30 மணிக்கு ஆம்பூருக்கு வந்தடைகிறது. அதனால் மாணவா்கள், தொழிலாளா்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பேருந்து நேரத்தை மாற்றியமைக்கக் கோரி, பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உமா்ஆபாத் போலீஸாா், ஆம்பூா் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் அங்கு சென்று நேரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT