திருப்பத்தூர்

கைலாசகிரி ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி

27th Jun 2022 11:36 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சி 8-ஆவது வாா்டு கடாம்பூரில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதாகவும், எனவே குடிநீா் வழங்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், ஊராட்சி மன்றத் தலைவா் ஆய்வு செய்து இடத்தைத் தோ்வு செய்து அங்கு ரூ.5.40 லட்சத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பணியை ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். துணைத் தலைவா் அரவிந்தன், ஊராட்சி செயலா் முரளி, வாா்டு உறுப்பினா் பைரோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT