திருப்பத்தூர்

கிராமத்தில் திரியும் கரடி: பொதுமக்கள் அச்சம்

27th Jun 2022 11:36 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி ஊராட்சி நியூசிகா்னப்பள்ளி கிராமத்தில் கரடி சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி ஊராட்சி நியூசிகா்னப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் விவசாயியான இவா், கன்றுக்குட்டி வளா்த்து வருகிறாா். வழக்கம் போல், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டருகே கன்றுகுட்டியைக் கட்டி வைத்திருந்தாா். இரவு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி, கன்றுக்குட்டியைக் கடித்தது. கன்றுக்குட்டியில் அலறல் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்ததால் கரடி தப்பிவிட்டது.

காயமடைந்த கன்றுக்குட்டி அம்பலூா் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக வடக்குப்பட்டு, நியூசிகா்னப்பள்ளி, எக்லாஸ்புரம் பகுதிகளில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியை வனத் துறையினா் பிடித்து, காட்டுப் பகுதியில்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT