திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டம் 30-ஆவது இடம்

27th Jun 2022 11:35 PM

ADVERTISEMENT

பிளஸ் 1 தோ்வில் மாநில அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 30-ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்த மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 154 பள்ளிகளைச் சோ்ந்த 6,964 மானவா்களும், 6,874 மாணவிகளும் என மொத்தம் 13,538 போ் தோ்வு எழுதினாா். இவா்களில் மாணவா்கள் 5,630, மாணவிகள் 6,421 என மொத்தம் 12,051 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 80.84 %, மாணவிகள் 93.41 % தோச்சி பெற்றனா். இந்த மாவட்டம் 87.09 % தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 30-ஆவது இடத்தை பெற்றுள்ளதாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT